சிலரை கண்டு நாம் அடிக்கடி கடிந்துந்து கொள்வதுண்டு , "வயசுக்கு தகுந்த மாறி பண்ண டா " இப்படி பேசும் பெரியவர்கள் ,
அப்போ "நீயாது பண்ணு டா" நு சொல்ல மனசு தவிக்கும்,நம்மளோட யோசனையா ஒருத்தவங்க மதிக்கலனா நாம எப்படி பட்ட இடத்துக்கு தள்ளப்படுவோம்னு,அவங்களுக்கு தெரியாது.எனக்கு தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருந்தாரு ,ரொம்ப நல்ல மனுஷனா நடக்கனும்னு நிறையவே முயற்சி செய்து தோல்விய சந்திக்கிற ஒரு நபர்.தோழி ஒருத்தி வீட்ல நடந்த சண்டைக்கு நான் அவரை பரிந்துரை செய்தேன் ,அவளோட அப்பா என்ன நம்பவே இல்லை ,சிறுபிள்ள விட்ட வெள்ளாம வீடு வந்து சேராது பா அப்படி

அவர் பேசுனது எனக்கு வலிக்கல என்ன கொன்னுச்சு ,அவர் அந்த வக்கீல கூப்பிட்டு ஒரு தடவையாது பேசிருந்திருக்கலாம்,இல்லனா என்ன கூப்பிட்டு வேற ஏதாது சொல்லியாச்சு சமாளிச்சிருக்கலாம்,எதுமே பண்ணாம என்னோட யோசனைக்கு அப்போ அவர் செவி சாய்க்கலன்னு நினைக்கும்போது மனசு வலிச்சது,நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு விளையாட போறப்போ,அவங்க அப்பா அவனுடைய பேச்சுக்கு கொடுக்குற மரியாதைய பார்க்கும்போது என் வீட்ட நினச்சி நிறைய ஆத்திரம் வரும் ,என்னோட வயசுக்கு மீறி நான் பண்றதா அவங்களே ஒத்துக்கும்போது,என்னோட யோசனைய மட்டும் சின்னபுள்ள தனம்னு ஏன் சொல்றாங்கன்னு புரியாம சுத்துவேன்,அப்புறம் தான் யோசிப்பேன் ,இதுல பெரியவங்க மரியாத அடங்கியிருக்கேன்னு!ஒருவேள இததான் சின்ன புள்ள தனம்னு சொல்றாங்களோ என்னவோ !இப்போ நான் பெரியவன் சில சமயங்கள்ல நான் பேசிக்கிட்டு இருக்குறப்போ திடீர்னு குறுக்கவந்து பேசிட்டு போற கொழந்தையோட வார்த்தைகள் நம் பேச்சைவிட வலிமையுள்ளதா இருக்குறத நினைத்து ஆச்சர்யபட்டிருக்கேன்.அந்த மர்மம் புரியாம தவிச்சிருக்கேன்.என் அக்கா பையன் ஒரு நாள் கடைக்கு கூட்டிட்டு போனப்போ என்னபார்த்து கேக்குறான்,
யாரு மாமா இலங்கைதமிழர்கள்னு!! பதில் சொல்லி முடிஞ்ச அப்புறம் சொல்றான்
,நம்ம இந்தியா அவங்கள காப்பாதலாம்னு ! சின்ன பையனுக்கு தெரிஞ்சது மத்தியில உள்ள பெரியவங்களுக்கு தெரியாம போனதுக்கு என்ன காரணம்? இங்க ஒரு சட்டம் இயற்ற படாமலே அமலுக்கு வந்திருக்கிறது ,சொல்ற செய்திய கேக்குறதுக்கு முன்னாடி சொல்றது யார்ன்னு பாக்குற சட்டம் ! இந்த செய்திய சொல்ல வயசு தடையா இருக்குமா? அப்டி யோசிச்சு யோசிச்சு நாம சும்மா கிடந்து இன்னைக்கு ஊமை ஆக்கப்பட்டிருக்கோம் ,நான் என் இயக்குனர் கிட்ட ஒரு நாள் கதைவிவாததின் போது சொன்ன செய்தி என்னவென்று அவரால் ஆராயமுடியல ,காரணம் அங்கிருந்த உதவி இயக்குனர்களில் நான் சிறியவன் ,கடைசியில் விமர்சனத்தின்போது நான் கூறியதை விமர்சனக்காரர்கள் ஆராய்ந்திருந்தார்கள் ,என் முகத்த அவரால் அதற்க்கு பின்பு பார்க்க கஷ்டப்பட்டத கண்டு அவர விட்டு நானே விலகுனேன் ,இப்போ நான் அவர விட்டு விலகினது நான் இயக்குனர் ஆக குறிச்ச நாள கொஞ்சம் தள்ளி தான் போட்டுச்சு , என் வயதே எனக்கு மிகப்பெரிய தடையா அமைந்த சோகத்த நான் மறைச்சி தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்,என்னைப்போல பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த பிரச்சன இருந்துகிட்டு தான் இருக்கு,அத எதிர்த்து போராட வேண்டிய கடமைக்கு ஆளானால் தான் வெற்றிய விருந்துண்ண முடியும் .
No comments:
Post a Comment