
நம்ம நண்பர் சிலர் வாழ்கையில இது நடந்திருக்கலாம்,இல்ல வேடிக்கை பார்க்க போன இடத்துல இது நடந்திருக்கலாம் ,இல்ல நம்ம வாழ்கைல கூட நடந்திருக்கலாம்,
நான் யார் என்று நமக்கே தெரியாம பைத்தியமா சுத்துற அந்த சில நிமிடங்கள், நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலும் கடந்து போயிருக்கலாம்,ரொம்ப சாதாரணமான கேள்வி,ஆனா பதில் சொல்றதுக்கு முன்னாடி , பல் தெரியாத புன்னகையை கேள்விக்கு பரிசளிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்,சென்னை பஸ் கிளம்புற முன்னாடி நண்பன்கிட்ட விடை பெற்றுட்டு இருக்கைல நான் கனவுகண்ட எதிர்காலம் தான் அந்த கேள்விக்கு பதில்,சினிமா ல உதவி இயக்குனர்,இந்த பதிலுக்காக நான் இழந்த வருடங்கள் என் வாழ்வில்
ஒரு உண்ணதமான தருணம் .....
நான் யார் என்ற அந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம ஓடி ஒளிந்த இடங்களில் எல்லாம் நான் கண்ட அனுபவங்கள் என்னை இங்கே அவற்றை பதிவுகளாய் பதிய உட்காரவைக்கும் அளவிற்கு அமைதியாக்கி இருக்கிறது என்பதை என்னால் மறுக்க இயலாது,இன்று நகரங்களில் படித்ததை பைக்குள் வைத்து கொண்டு படிப்படியாய் ஏறி இறங்கும் பட்டதாரிகளை பார்க்கும் போது மனம் படபடப்பது ஒன்றில் தான்,அவர்கள் சாப்பிட்டார்களா?என்ற கேள்வியில் தான். நான் எனக்கான முகவரியை தேடி அலைந்த போது நான் இட்ட எனது வாழ்கைக்கான பெயர் பசியா இரவுகள் ,தண்ணீரும் தாடியும் எனது அடையாளம், சினிமாக்காரன் எனது பொதுப்பெயர் ,வேலையில்லாதவன் எனது வழக்கப்பெயர் ,பைத்தியக்காரன் எனது கௌரவப்பெயர் ,உண்மையில் நான் யார் என்ற கேள்விகளுக்கு நான் கொடுத்த விலை மதிப்பிலடங்காதது,
ஒரு நண்பன் ஒரு காதலி,தன்னை காத்துக்கொள்ள என்னை பணையம் வைக்க முயன்ற அவர்களது முயற்சிக்கு விளைவாய், நான் என்னை அறிந்தததே முடிவானது.அவர்கள் எமார்நதார்கள், என்னை ஏமாற்றியதால்.நான் என்னை தெரிந்துகொண்டேன் அவர்களால்.என்னை முயலவைக்க அவர்கள் எடுத்த வஞ்சக முயற்சிக்கு நன்றி.இப்பொழுது நான் யார் என்பதை நான் வெளியில் கூற தயங்குவதில்லை.எதிர்காலம் கனவால் மட்டும் அமையாது முயற்சியால் தான் அமைவது
என்பதற்கு என்னைப்போன்றவர்கள் சாட்சி.
No comments:
Post a Comment