Sunday, 25 September 2011

கதை சொல்லிகள்


சில உறவுகள் நம்மை விடாது , நாம தோத்துபோறப்போ சிரிக்கிற சிலரை மறக்குறது ரொம்ப கஷ்டம் !  ஒரு நாள் என்னுடைய  குறும்படம் ஒன்னு இணைய தளத்துல விட்டேன் !நிறைய பேர் ரசிச்சிருந்தாங்க,ஒருதற்கு மட்டும் ஏனோ புடிக்ல , ஏன் புடிக்கலன்னு அவர்கிட்ட கேட்க துடிச்சேன் ,ஆனா அந்த படத்த ரசிச்ச நிறையபேர்ல ஒருத்தர் கூட நம்ம கண்ணுக்கு தெரியாம போச்சே !,இவர் மட்டும் ஏன் இப்டி என்ன புலம்ப  விட்டாருன்னு, என்ன நானே  கேட்க்க ஆரம்பிச்சேன் ! .... ரசிச்ச அவ்ளோ பேர்ல அவர மட்டும் கண்ணுல நிறுத்திட்டு மத்த எல்லாரையும் நான் மறந்துட்டேன் !உண்மையான கருத்துக்கள பகிருற சிலரை நாம எல்லாரும் இப்படி  தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வேற வேற மாறி உதாசின படுத்திக்கிட்டு இருக்கோம்! என் வாழ்கையில நான் சந்திச்ச உறவுகள் எனக்கு நிறைய சொல்லிகொடுத்துருக்காங்க , நான் சின்ன வயசுல இருந்தப்போ, என் பாட்டில இருந்து என்ன கடந்து சென்ற யாரோ ஒருவர் வரைக்கும் ,எனக்கு நேரடியாகவோ இல்ல மறைமுகமாகவோ இல்ல வாழ்ந்தோ சொல்லிகொடுத்துருக்காங்க! எல்லாத்தையும் நான் உணர்ந்துருக்கேன் ! அந்த அந்த வயசுக்கு தகுந்தமாதிரி  என்னோட மூளை  வளர்ச்சிக்கு தகுந்தமாதிரி  ஒவ்வொருத்தரும் சில கதைகள சொல்லிகிட்டே இருக்காங்க !ஒரு ஊர் ல ஒரு ராஜானு ஆரம்பிச்ச அம்மா முதல் . கடைசில விட்டு போய்டடா மச்சான்னுஅழுகுர நண்பன் வரைக்கும் ஏதோ ஒருவகைல என்ன எச்சரிச்சுகிட்டே இருக்காங்க ! இத பண்ணாதடானு   சொன்னா, நான் அத கேக்கமாட்டேன்,இது அதுனால ஆகும்டானு ,  சொன்னா யோசிப்பேன் ,எனக்கு இப்டிதான்டா ஆச்சுனு  சொன்னா நிறுத்துவேன்! அது உண்மையா இருந்தா அதுக்கு மேல செய்யமாட்டேன் , எல்லாத்தையும் கதைகளா கேட்டு வளந்தவங்க தானே நாம எல்லாரும் ! நானும் உங்களில் ஒருவன் தானே ! அப்படி என்கிட்ட கதை சொல்லிய கதை சொல்லிகள் எல்லாரும் இப்போ என்கிட்ட தொடர்பில  இருக்காங்களான்னு   கேட்டா  நான் விழிப்பேன்!,காரணம், நிறைய பேர் தொடர்பில்  இல்ல ! நான் அவங்கள இழந்தேனா !இல்ல, என்ன அவங்க இழந்தார்களா ! இல்ல அவங்க என் வாழ்கைல வந்ததே கதை சொல்லிட்டு போகத்தானா? வியப்புடனும் அடுத்து வரும் கதை சொல்லி யார் என்ற ஆர்வத்துடனும் என் பயணம் !    

Monday, 5 September 2011

வயது எனும் தடைக்கல்



சிலரை கண்டு நாம் அடிக்கடி கடிந்துந்து கொள்வதுண்டு , "வயசுக்கு தகுந்த மாறி பண்ண டா " இப்படி பேசும் பெரியவர்கள் ,
அப்போ "நீயாது பண்ணு டா" நு சொல்ல மனசு தவிக்கும்,நம்மளோட யோசனையா ஒருத்தவங்க மதிக்கலனா நாம எப்படி பட்ட இடத்துக்கு தள்ளப்படுவோம்னு,அவங்களுக்கு தெரியாது.எனக்கு தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருந்தாரு ,ரொம்ப நல்ல மனுஷனா நடக்கனும்னு நிறையவே முயற்சி செய்து தோல்விய சந்திக்கிற ஒரு நபர்.தோழி ஒருத்தி வீட்ல நடந்த சண்டைக்கு நான் அவரை பரிந்துரை செய்தேன் ,அவளோட  அப்பா என்ன நம்பவே இல்லை ,சிறுபிள்ள விட்ட வெள்ளாம வீடு வந்து சேராது பா அப்படி
அவர் பேசுனது எனக்கு வலிக்கல என்ன கொன்னுச்சு ,அவர் அந்த வக்கீல கூப்பிட்டு ஒரு தடவையாது பேசிருந்திருக்கலாம்,இல்லனா  என்ன கூப்பிட்டு வேற ஏதாது சொல்லியாச்சு சமாளிச்சிருக்கலாம்,எதுமே பண்ணாம என்னோட யோசனைக்கு அப்போ அவர் செவி சாய்க்கலன்னு நினைக்கும்போது மனசு வலிச்சது,நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு  விளையாட போறப்போ,அவங்க அப்பா அவனுடைய பேச்சுக்கு கொடுக்குற மரியாதைய பார்க்கும்போது என் வீட்ட நினச்சி நிறைய ஆத்திரம் வரும் ,என்னோட வயசுக்கு மீறி நான் பண்றதா அவங்களே ஒத்துக்கும்போது,என்னோட யோசனைய மட்டும்  சின்னபுள்ள தனம்னு ஏன் சொல்றாங்கன்னு புரியாம சுத்துவேன்,அப்புறம் தான் யோசிப்பேன் ,இதுல பெரியவங்க மரியாத அடங்கியிருக்கேன்னு!ஒருவேள இததான் சின்ன புள்ள தனம்னு சொல்றாங்களோ என்னவோ !இப்போ நான் பெரியவன் சில சமயங்கள்ல நான் பேசிக்கிட்டு இருக்குறப்போ திடீர்னு குறுக்கவந்து பேசிட்டு போற கொழந்தையோட வார்த்தைகள் நம் பேச்சைவிட வலிமையுள்ளதா இருக்குறத நினைத்து ஆச்சர்யபட்டிருக்கேன்.அந்த மர்மம் புரியாம தவிச்சிருக்கேன்.என் அக்கா  பையன் ஒரு நாள் கடைக்கு கூட்டிட்டு போனப்போ என்னபார்த்து  கேக்குறான்,யாரு மாமா இலங்கைதமிழர்கள்னு!! பதில் சொல்லி முடிஞ்ச அப்புறம் சொல்றான் ,நம்ம இந்தியா அவங்கள காப்பாதலாம்னு ! சின்ன பையனுக்கு தெரிஞ்சது மத்தியில உள்ள பெரியவங்களுக்கு தெரியாம போனதுக்கு என்ன காரணம்? இங்க ஒரு சட்டம் இயற்ற படாமலே அமலுக்கு வந்திருக்கிறது ,சொல்ற செய்திய கேக்குறதுக்கு முன்னாடி சொல்றது யார்ன்னு பாக்குற சட்டம் ! இந்த செய்திய சொல்ல வயசு தடையா  இருக்குமா? அப்டி யோசிச்சு யோசிச்சு நாம சும்மா கிடந்து இன்னைக்கு ஊமை ஆக்கப்பட்டிருக்கோம் ,நான் என் இயக்குனர் கிட்ட ஒரு நாள் கதைவிவாததின் போது சொன்ன செய்தி என்னவென்று அவரால் ஆராயமுடியல ,காரணம் அங்கிருந்த உதவி இயக்குனர்களில் நான் சிறியவன் ,கடைசியில் விமர்சனத்தின்போது நான் கூறியதை விமர்சனக்காரர்கள் ஆராய்ந்திருந்தார்கள் ,என் முகத்த  அவரால் அதற்க்கு பின்பு பார்க்க கஷ்டப்பட்டத  கண்டு அவர விட்டு நானே விலகுனேன் ,இப்போ நான் அவர விட்டு விலகினது நான் இயக்குனர் ஆக குறிச்ச நாள கொஞ்சம் தள்ளி தான் போட்டுச்சு , என் வயதே எனக்கு மிகப்பெரிய தடையா அமைந்த சோகத்த நான் மறைச்சி தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்,என்னைப்போல பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த பிரச்சன இருந்துகிட்டு தான் இருக்கு,அத எதிர்த்து போராட வேண்டிய கடமைக்கு ஆளானால் தான் வெற்றிய விருந்துண்ண முடியும் .

Sunday, 4 September 2011

உண்மையில் நான்


நம்ம நண்பர் சிலர் வாழ்கையில இது நடந்திருக்கலாம்,இல்ல வேடிக்கை பார்க்க போன இடத்துல இது நடந்திருக்கலாம் ,இல்ல நம்ம வாழ்கைல கூட நடந்திருக்கலாம்,நான் யார் என்று நமக்கே தெரியாம பைத்தியமா சுத்துற அந்த சில நிமிடங்கள், நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலும் கடந்து போயிருக்கலாம்,ரொம்ப சாதாரணமான கேள்வி,ஆனா பதில் சொல்றதுக்கு முன்னாடி , பல் தெரியாத புன்னகையை கேள்விக்கு பரிசளிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்,சென்னை பஸ் கிளம்புற முன்னாடி நண்பன்கிட்ட விடை பெற்றுட்டு இருக்கைல  நான் கனவுகண்ட எதிர்காலம் தான் அந்த கேள்விக்கு பதில்,சினிமா ல உதவி இயக்குனர்,இந்த பதிலுக்காக நான் இழந்த  வருடங்கள் என் வாழ்வில் ஒரு உண்ணதமான தருணம் ..... நான் யார் என்ற அந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம ஓடி ஒளிந்த இடங்களில் எல்லாம் நான் கண்ட அனுபவங்கள் என்னை இங்கே அவற்றை பதிவுகளாய் பதிய உட்காரவைக்கும் அளவிற்கு அமைதியாக்கி இருக்கிறது என்பதை என்னால் மறுக்க இயலாது,இன்று நகரங்களில் படித்ததை பைக்குள் வைத்து கொண்டு படிப்படியாய் ஏறி இறங்கும் பட்டதாரிகளை பார்க்கும் போது மனம் படபடப்பது ஒன்றில் தான்,அவர்கள் சாப்பிட்டார்களா?என்ற கேள்வியில் தான். நான் எனக்கான முகவரியை தேடி அலைந்த போது நான் இட்ட எனது வாழ்கைக்கான பெயர் பசியா இரவுகள் ,தண்ணீரும் தாடியும் எனது அடையாளம், சினிமாக்காரன் எனது பொதுப்பெயர் ,வேலையில்லாதவன் எனது வழக்கப்பெயர் ,பைத்தியக்காரன் எனது கௌரவப்பெயர் ,உண்மையில் நான் யார் என்ற கேள்விகளுக்கு நான் கொடுத்த விலை மதிப்பிலடங்காதது,ஒரு நண்பன் ஒரு காதலி,தன்னை காத்துக்கொள்ள என்னை பணையம் வைக்க முயன்ற அவர்களது முயற்சிக்கு விளைவாய், நான் என்னை அறிந்தததே முடிவானது.அவர்கள் எமார்நதார்கள், என்னை ஏமாற்றியதால்.நான் என்னை தெரிந்துகொண்டேன் அவர்களால்.என்னை முயலவைக்க அவர்கள் எடுத்த வஞ்சக முயற்சிக்கு நன்றி.இப்பொழுது நான் யார் என்பதை நான் வெளியில் கூற தயங்குவதில்லை.எதிர்காலம் கனவால் மட்டும் அமையாது முயற்சியால் தான் அமைவது  என்பதற்கு என்னைப்போன்றவர்கள் சாட்சி.